ADDED : ஜன 30, 2024 11:43 PM
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கொள்முதல் நிலைய எழுத்தர் மனோஜ்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் முருகன், ஓ.கீரனுார் விநாயகமூர்த்தி, வி.ஏ.ஓ., வினோத் முன்னிலை வகித்தனர். பருவ கால உதவியாளர் சந்தோஷ், விவசாயிகள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், பெ.பூவனுார், ஓ.கீரனுார் கிராம பகுதிகளில் அறுவடை செய்து, விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயி ராமலிங்கம் நன்றி கூறினார்.