ADDED : ஜன 28, 2024 04:35 AM
பெண்ணாடம், : பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
கொள்முதல் நிலைய எழுத்தர் சுதா தலைமை தாங்கினார். பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா, உழவர் மன்ற தலைவர் பரமசிவம், உழவர் உற்பத்தி நிறுவனர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
வார்டு மக்கள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், பெண்ணாடம், திருமலை அகரம் பகுதியில் அறுவடை செய்த சம்பா நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.
கொள்முதல் நிலைய உதவியாளர் வேம்பு நன்றி கூறினார்.