/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புதிய பஸ் நிலையத்தை எம்.புதுாருக்கு மாற்ற... எதிர்ப்பு; அரசியல் கட்சிகள், நகர் நல சங்கங்கள் போராட்டம் புதிய பஸ் நிலையத்தை எம்.புதுாருக்கு மாற்ற... எதிர்ப்பு; அரசியல் கட்சிகள், நகர் நல சங்கங்கள் போராட்டம்
புதிய பஸ் நிலையத்தை எம்.புதுாருக்கு மாற்ற... எதிர்ப்பு; அரசியல் கட்சிகள், நகர் நல சங்கங்கள் போராட்டம்
புதிய பஸ் நிலையத்தை எம்.புதுாருக்கு மாற்ற... எதிர்ப்பு; அரசியல் கட்சிகள், நகர் நல சங்கங்கள் போராட்டம்
புதிய பஸ் நிலையத்தை எம்.புதுாருக்கு மாற்ற... எதிர்ப்பு; அரசியல் கட்சிகள், நகர் நல சங்கங்கள் போராட்டம்
ADDED : மே 14, 2025 06:30 AM

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தை எம்.புதுாருக்கு மாற்றும் முயற்சிக்கு அரசியல் கட்சியினர், நகர நலச்சங்கங்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
கடலுார் நகரம் மாநகராட்சியாக மாற்றப்பட்டப் பின்னர், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் வேண்டும் என கட்டாயமாகிறது. அதையொட்டி இருக்கின்ற பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி தற்போது இருக்கும் இடத்திலேயே பஸ் நிலையம் இயங்கினால் தான் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
அதை விடுத்து நகருக்கு அப்பால் கேப்பர் மலையில் உள்ள எம்.புதுார் என்ற இடத்தில் பஸ் நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சமானிய மக்கள் பெரும் அவதிப்பட வேண்டிய நிலை வரும்.
தேவையற்ற ஆட்டோ செலவு, இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை, லோக்கல் பஸ் கட்டணம் என கூடுதல் செலவு ஆகும். மாநகரம் வளர்ச்சி பெறும் போது வேண்டுமானால் பஸ் நிலையத்தை மாற்றிக் கொள்ளலாம்.
எனவே பஸ் நிலையம் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு அந்த இடத்தில் பஸ் நிலையத்தை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் எம்.புதுாரில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க அனைத்து பணிகளும் ஜரூராக நடந்து வருகின்றன. சுற்றிலும் தடுப்பு தட்டிகள் அமைத்து இடத்தை சமன் செய்து பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதனால் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வின் கூட்டணி கட்சிகளான கம்யூ.,-வி.சி., கட்சி, நகர் நலச்சங்கங்கள் ஒருங்கிணைத்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
முற்றுகை போராட்டம்
இதன் ஒரு பகுதியாக இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக்கட்சிகள், குடியிருப்போர் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் முற்றுகைபோராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின், நடந்த போராட்டத்திற்கு மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச் செல்வன் துவக்கி வைத்து பேசினார்.
மா.கம்யூ., செயற்குழு உறுப்பினர் சுப்ராயன், வி.சி., கட்சி வழக்கறிஞர் திருமார்பன், மீனவர் அணி கார்த்திக், ஏகாம்பரம், குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் மருதவாணன், செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.