ADDED : மே 24, 2025 07:13 AM

சேத்தியாத்தோப்பு, : பூதங்குடியில் வீராணம் ஏரியின் வி.என்.எஸ்., மதகில் மூடப்பட்ட பாலம் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் மீண்டும் திறக்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு அடுத்த வீராணம் ஏரியின் வடிகால் வாய்க்கால் வி.என்.எஸ்., மதகு பாலத்தின் வழியாக பூதங்குடி, கோதண்டவிளாகம், வட்டத்துார் உள்ளிட்ட கிராம விவசாயிகள் கோதாவரி வாய்க்காலை கடந்து தங்கள் நிலத்திற்கும், கால்நடை மேய்ச்சலுக்கும் சென்று வந்தனர்.
இந்நிலையில், மதகு உள்ள பாலத்தில் திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள், இரும்பு கேட் போட்டு யாரும் செல்லாத வகையில் மூடினர். இதனால், விவசாயிகள் நிலத்திற்கும், கால்நடைகளை மேய்ச்சலுக்கும் கொண்டு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து 'தினமலர் நாளிதழில்' படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, பாலத்தின் இரும்பு கேட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு திறந்தனர்.