வீராணம் ஏரியில் மூழ்கி ஒருவர் பலி
வீராணம் ஏரியில் மூழ்கி ஒருவர் பலி
வீராணம் ஏரியில் மூழ்கி ஒருவர் பலி
ADDED : ஜூன் 16, 2025 01:27 AM

சேத்தியாத்தோப்பு : பூதங்குடி அருகே வீராணம் ஏரியில் மூழ்கி ஒருவர் இறந்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்,45; திருமணமாகவில்லை. இவர், நேற்று மாலை 5:00 மணிக்கு பூதங்குடி வீ.என்.எஸ்., மதகு அருகே வீராணம் ஏரி படித்துறையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென தண்ணீரில் மூழ்கினார். உடன், அருகில் இருந்தவர்கள், தண்ணீரில் இறங்கி ரமேைஷ சடலமாக மீட்டனர். தகவலறிந்த ஒரத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.