/உள்ளூர் செய்திகள்/கடலூர்/26ல் என்.எல்.சி., நிறுவனம் முற்றுகை ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு26ல் என்.எல்.சி., நிறுவனம் முற்றுகை ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு
26ல் என்.எல்.சி., நிறுவனம் முற்றுகை ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு
26ல் என்.எல்.சி., நிறுவனம் முற்றுகை ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு
26ல் என்.எல்.சி., நிறுவனம் முற்றுகை ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு
ADDED : ஜன 11, 2024 03:58 AM
கடலுார்: கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26ம் தேதி குடியரசு தினத்தில் தொழிலாளர் குடும்பத்தோடு, என்.எல்.சி., தலைமை அலுவலகத்தை கருப்பு கொடியோடு முற்றுகையிட உள்ளதாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
என்.எல்.சி., நிறுவனத்தில், ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடலுாரில் நேற்று மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து நேற்று மாலை, கலெக்டர் அருண்தம்புராஜ், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினார்.
பின், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகர் கூறியதாவது;
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு தலையிட வலியுறுத்தி, ஊர்வலம் நடத்துவதற்காக வந்தோம். அதற்கு அனுமதி மறுத்து, போலீசார் எங்களை கைது செய்தனர். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்தும், நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
அதற்கு, விரைவில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்தார்.
இருப்பினும் மத்திய, மாநில அரசுக்கு, எங்கள் பிரச்னை தொடர்பாக அழுத்தம் கொடுக்கும் வகையில் நாளை(இன்று) வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவது என்றும், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தில் தொழிலாளர்கள் குடும்பத்தோடு, என்.எல்.சி., தலைமை அலுவலகத்தை கருப்பு கொடியோடு முற்றுகையிட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.