/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தீக்குளிக்கும் கலாசாரம் எதிரொலி தீயணைப்பு படையுடன் வரும் அதிகாரிகள் தீக்குளிக்கும் கலாசாரம் எதிரொலி தீயணைப்பு படையுடன் வரும் அதிகாரிகள்
தீக்குளிக்கும் கலாசாரம் எதிரொலி தீயணைப்பு படையுடன் வரும் அதிகாரிகள்
தீக்குளிக்கும் கலாசாரம் எதிரொலி தீயணைப்பு படையுடன் வரும் அதிகாரிகள்
தீக்குளிக்கும் கலாசாரம் எதிரொலி தீயணைப்பு படையுடன் வரும் அதிகாரிகள்
ADDED : செப் 10, 2025 08:19 AM

பொதுவாக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் கையாளும் கலாசாரத்தை விட, வரி வசூலில் ஈடுபடும் அதிகாரிகள் அதை தடுப்பதற்கான வழிமுறைகளையும் தாங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டியதாக உள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து நடவடிக்கை இல்லையென்றால் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீவைத்துக்கொள்ளும் கலாசாரம் இருந்து வருகிறது. அதே பழக்கம் தற்போது பரிணாம வளர்ச்சி பெற்று வரி வசூல் செய்யப்போகும் இடத்திலும் தொற்றிக்கொண்டுள்ளது.
அதற்கு ஒரு உதாரணமாக, கடலுார் மாவட்டத்தில் வரி வசூல் செய்ய சென்றால் மண்ணெண்ணெய் ஊற்றி தன்னைத்தானே தீ வைத்துக்கொள்ளும் கலாசாரம் மேலோங்கி வருகிறது. கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இந்த கோவில் சொத்துக்கள், கடைகள் போன்றவை நீண்ட நெடுங்காலமாக பலர் அனுபவத்தில் வைத்து கொண்டு வாடகை செலுத்தி வருகின்றனர். இதில் சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக வாடகை பாக்கி செலுத்தாமலும் உள்ளனர்.
அவற்றை வசூலிக்கும் பொருட்டு நேற்று கோவில் செயல் அலுவலர் ஞானசுந்தரம் தலைமையில், வரி வசூல் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டது. வரி வசூல் செய்வதற்கு ஏதாவது பிரச்னை என்றால் போலீசார்தான் பாதுகாப்புக்கு வைத்துக் கொள்வார்கள்.
அதை விடஒரு படி மேலே போய் பாக்கி வைத்திருக்கும் பலர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயலுவதை தடுக்க, வசூலுக்கு வரும்போதே தீயணைப்பு வாகனத்துடன் வருகின்றனர்.
அவ்வாறு வாடகை கொடுக்காதவர்கள் ஏதாவது தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றால் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து உயிரை காப்பாற்றுவதற்காக தயாராக சென்றனர்.
நேற்று ஒரு கடையில் நிலுவைத்தொகை கேட்கும் போது, உள்ளே இருந்த 4 பேர் குடும்பத்தினருடன் வெளியில் வந்து பெட்ரோலை உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து காப்பாற்றப்பட்டது.
இதனால், செயல் அலுவலர், அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.