/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சி.வி., பக்கத்திற்கு தொழிலகப் பாதுகாப்பு அலுவலகம் இடமாற்றம்சி.வி., பக்கத்திற்கு தொழிலகப் பாதுகாப்பு அலுவலகம் இடமாற்றம்
சி.வி., பக்கத்திற்கு தொழிலகப் பாதுகாப்பு அலுவலகம் இடமாற்றம்
சி.வி., பக்கத்திற்கு தொழிலகப் பாதுகாப்பு அலுவலகம் இடமாற்றம்
சி.வி., பக்கத்திற்கு தொழிலகப் பாதுகாப்பு அலுவலகம் இடமாற்றம்
UPDATED : ஜூலை 03, 2025 07:39 AM
ADDED : ஜூலை 02, 2025 11:47 PM
கடலுார் : திருச்சி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர் வட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய திருச்சி மண்டல கூடுதல் இயக்குனர் அலுவலகம், இம்மாதம் 1ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் புதிய முகவரியான கதவு எண். 17/2, சமத் பள்ளித்தெரு, காஜா நகர், திருச்சி - 620020 என்ற முகவரியில் செயல்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.