/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சத்துணவு ஓய்வூதியர்கள் மக்கள் சந்திப்பு பிரசாரம் சத்துணவு ஓய்வூதியர்கள் மக்கள் சந்திப்பு பிரசாரம்
சத்துணவு ஓய்வூதியர்கள் மக்கள் சந்திப்பு பிரசாரம்
சத்துணவு ஓய்வூதியர்கள் மக்கள் சந்திப்பு பிரசாரம்
சத்துணவு ஓய்வூதியர்கள் மக்கள் சந்திப்பு பிரசாரம்
ADDED : செப் 01, 2025 06:33 AM
கடலுார் : சமூக நீதிகேட்டு இன்று (1ம் தேதி ) முதல் 15ம் தேதி வரை கடலுார் மாவட்டம் முழுதும் சத்துணவு ஊழியர்களுக்கு நியாயம் கேட்டு ஓய்வூதியர்கள் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நடராஜன் வரவேற்றார். செயலாளர் ரங்கரசாமி வேலை அறிக்கை மற்றும் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் சமூக நீதிகேட்டு மாநில செயற்குழு முடிவின்படி இன்று 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை கடலுார் மாவட்டம் முழுதும் சத்துணவு ஊழியர்களுக்கு நியாயம் கேட்டு மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்துவது.
சென்னை ஐகோர்ட் தீர்ப்பின்படி 1.10.2017 முதல் 3,850 ரூபாயை அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க அரசை வலியுறுத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அன்பழகன், சுப்ரமணியன், மங்கையர்கரசி, பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.