/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வடலுாரில் வீடு புகுந்து திருட்டு வடமாநில வாலிபரிடம் விசாரணை வடலுாரில் வீடு புகுந்து திருட்டு வடமாநில வாலிபரிடம் விசாரணை
வடலுாரில் வீடு புகுந்து திருட்டு வடமாநில வாலிபரிடம் விசாரணை
வடலுாரில் வீடு புகுந்து திருட்டு வடமாநில வாலிபரிடம் விசாரணை
வடலுாரில் வீடு புகுந்து திருட்டு வடமாநில வாலிபரிடம் விசாரணை
ADDED : செப் 15, 2025 02:26 AM
கடலுார்: வடலுாரில் வீடு புகுந்து இரும்பு பொருள் திருடிய வடமாநில வாலிபரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்,44; இவர் அதேப் பகுதியில் தனது சொந்த இடத்தில் ஒப்பந்ததாரர் மூலம் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று, காலை ஒப்பந்ததாரர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இரும்பு ஜாக்கி காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை சோதனை செய்த போது வடமாநில வாலிபர் ஒருவர் வீடு புகுந்து சைக்கிள் திருட முயன்றார். ஆனால் சைக்கிள் இரும்பு செயின் கொண்டு பூட்டி இருந்ததால் அருகில் இருந்த 10 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு ஜாக்கியை திருடிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து வீட்டின் அருகில் சுற்றித் திரிந்த அந்த வாலிபரை பிடித்து ராமலிங்கம் வடலுார் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். போலீசார், வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.