/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சலுான் கடையில் திருடிய வடமாநில வாலிபர் கைதுசலுான் கடையில் திருடிய வடமாநில வாலிபர் கைது
சலுான் கடையில் திருடிய வடமாநில வாலிபர் கைது
சலுான் கடையில் திருடிய வடமாநில வாலிபர் கைது
சலுான் கடையில் திருடிய வடமாநில வாலிபர் கைது
ADDED : ஜன 07, 2024 05:42 AM
கடலுார்; சலுான் கடையில் பணம் திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி, காந்தி ரோட்டை சேர்ந்தவர் ரவிசங்கர், 43; கடலுார், கோண்டூரில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது வாபி, 30; என்பவர் கடந்த 2 வாரங்களாக வேலை செய்து வந்தார். கடந்த 5ம் தேதி, ரவிசங்கர் கல்லா பெட்டியில் 10 ஆயிரம் ரூபாயை வைத்து விட்டு வெளியில் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது, முகமது வாபியை காணவில்லை. கடையில் இருந்த பணத்தையும் காணவில்லை.
இதுகுறித்து ரவிசங்கர் கொடுத்த புகாரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, கடலுார் ரயில் நிலையத்தில் நின்றிருந்த முகமது வாபியை கைது செய்து, அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.