/உள்ளூர் செய்திகள்/கடலூர்/என்.எல்.சி., மண் சூழ்ந்து பாதிப்பு கம்மாபுரம் விவசாயிகள் கவலைஎன்.எல்.சி., மண் சூழ்ந்து பாதிப்பு கம்மாபுரம் விவசாயிகள் கவலை
என்.எல்.சி., மண் சூழ்ந்து பாதிப்பு கம்மாபுரம் விவசாயிகள் கவலை
என்.எல்.சி., மண் சூழ்ந்து பாதிப்பு கம்மாபுரம் விவசாயிகள் கவலை
என்.எல்.சி., மண் சூழ்ந்து பாதிப்பு கம்மாபுரம் விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 07, 2024 06:21 AM
விருத்தாசலம் : கம்மாபுரம் பகுதியில் என்.எல்.சி., நிறுவனத்தில் இருந்து அகற்றப்பட்ட மண்ணுடன் கலந்த மழைநீர், விளைநிலங்களில் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், ஊத்தாங்கால், ஊ.மங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் என்.எல்.சி., நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிக்கு வெட்டி எடுக்கப்பட்ட மண் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு, குவித்து வைத்திருந்த மணல் கலந்து, வாய்க்கால் வழியாக ஆங்காங்கே உள்ள விளைநிலங்களில் தேங்கியது.
இந்த மண் சூழ்ந்து நிற்பதால், விளைநிலங்கள் இறுகி சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு மாறி விடும். இதனால் கம்மாபுரம் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.எனவே, துார்ந்து கிடக்கும் என்.எல்.சி., வாய்க்கால்களை துார்வாரி, மழைநீருடன் விளைநிலங்களில் மண் புகுவதை தடுக்க வேண்டும். மேலும், மணல் சூழ்ந்த விளைநிலங்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.