/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நிர்மலா மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வில் அசத்தல் நிர்மலா மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வில் அசத்தல்
நிர்மலா மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வில் அசத்தல்
நிர்மலா மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வில் அசத்தல்
நிர்மலா மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வில் அசத்தல்
ADDED : மே 19, 2025 06:43 AM

சிதம்பரம்,: சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
பிளஸ் 2 தேர்வில், மாணவி லின்சிமேரி, ரித்திகா 575 மதிப்பெண், சுபத்ராதேவி, கவிபாரதி 569 மோனிகா 566 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனர். கணினி அறிவியிலில் 8 பேர், கணினி பயன்பாட்டில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
10 ம் வகுப்பு பொது தேர்வில், மாணவிகள் அனுஷ்கா, கமலி 494 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனர். கிரிபாலன் 493 மதிப்பெண், மோனிகா, ஐஸ்வர்யா 492 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்தனர். அறிவியல் பாடத்தில் 9 பேர், சமூக அறிவியலில் 6 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
பிளஸ் 1 தேர்வில் மாணவி ஹரிணி 600க்கு 590 மதிப்பெண் நகர அளவில் சிறப்பிடம் பெற்றார். பள்ளி அளவில் அர்ச்சனா 563 மதிப்பெண், அன்ஷிகா சிரின் 562 மதிப்பெண் பெற்றனர். கணினி அறிவியில், கணினி பயன்பாடு, வணிகம், பொருளியல் பாடங்களில் 5 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் அருட்சகோதரிகள் பெல்சியானா மரியம்மாள், பள்ளி முதல்வர் மார்கிரேட் ஷீலா பாராட்டினர்.