/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருதை தடுப்பணை பணியில் புதிய யுக்தி... அறிமுகம்; ரூ.25.20 கோடியில் நீரை சேமிக்க மாற்று வழி விருதை தடுப்பணை பணியில் புதிய யுக்தி... அறிமுகம்; ரூ.25.20 கோடியில் நீரை சேமிக்க மாற்று வழி
விருதை தடுப்பணை பணியில் புதிய யுக்தி... அறிமுகம்; ரூ.25.20 கோடியில் நீரை சேமிக்க மாற்று வழி
விருதை தடுப்பணை பணியில் புதிய யுக்தி... அறிமுகம்; ரூ.25.20 கோடியில் நீரை சேமிக்க மாற்று வழி
விருதை தடுப்பணை பணியில் புதிய யுக்தி... அறிமுகம்; ரூ.25.20 கோடியில் நீரை சேமிக்க மாற்று வழி

எம்.எல்.ஏ., முயற்சிக்கு பலன்
இதையடுத்து, மணவாளநல்லுாரில் தடுப்பணை கட்டி, மழைநீரை சேமிக்க வேண்டுமென, மணிமுக்தா நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து, பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் மணவாளநல்லுாரில் தடுப்பணை கட்ட வேண்டுமெனவும் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார். இதையேற்று, 25.20 கோடி ரூபாயில் தடுப்பணை கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
80 சதவீத பணிகள் நிறைவு
ரூ.25.20 கோடி நபார்டு வங்கி நிதியில், கடந்த ஜனவரி 20ம் தேதி, தடுப்பணை கட்டுமான பணிகள் துவங்கியது. 223 மீட்டர் நீளம், 125 மீட்டர் உயர தடுப்பணையில், 134 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும். இதன் மூலம் மணவாளநல்லுார், எருமனுார், கோமங்கலம், ராசாபாளையம் மற்றும் மணலுார், நாச்சியார்பேட்டை (விருத்தாசலம் நகரம்) பகுதிகளை உள்ளடக்கிய பொது மக்கள் மற்றும் விவசாயிகள், 222 ஆழ்குழாய் கிணறுகள் பயனடையும். 2,894 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறும் வசதி பெறுகிறது.
எஞ்சிய 20 சதவீத பணி
இறுதிக்கட்டமாக கரையின் இருபுறமும் சிமென்ட் கற்கள் பதிக்கப்பட உள்ளன. இதற்காக ஆற்றங்கரையில் தயார் நிலையில் உள்ள சிமென்ட் கற்களை இருபுறம் கரைகளிலும் பதித்து, மண் அரிப்பு பாதிப்பின்றி சரிசெய்யும் பணிகள் நடக்க உள்ளன.
நீர்மட்டம் உயர புது யுக்தி 12 போர்வெல் அமைப்பு
நிலத்தடி நீர் குறையாத வகையில், நீர்வளத்துறை புதிய யுக்தியை கையாளுகிறது. அதன்படி, தண்ணீர் தேங்கி நிற்கும் தடுப்பணையில் மேற்பகுதியில் போர்வெல் மூலம் குழாய்கள் பதித்து பைப்புகள் இறக்கப்படும்.