ADDED : ஜூன் 10, 2025 06:29 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இருந்து கிராமங்களுக்கு புதிய அரசு பஸ்களை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விருத்தாசலத்தில் இருந்து கண்டப்பங்குறிச்சி வழியாக எடையூர் வரை தடம் எண்-18, விருத்தாசலத்தில் இருந்து காப்பாங்குளம் வழியாக நெய்வேலிக்கு தடம் எண்- 35, அரசு பஸ்கள் இயங்குகின்றன. கிராமங்களுக்கு செல்லும் இந்த டவுன் பஸ்கள் பராமரிப்பின்றி இருந்ததால் பயணிகள், ஓட்டுனர்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.
இதையடுத்து, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இரண்டு வழித்தடங்களில் புதிதாக அரசு பஸ்களை இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கொடியசைத்து பஸ்களை துவக்கி வைத்தார்.