ADDED : ஜன 03, 2024 12:18 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே முன்விரோதத்தில், விவசாயியை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தை சேர்ந்த வர் ராமச்சந்திரன், 48; விவசாயி.
இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 9ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில், காசிராஜன், ஆதவாளர்கள் வேல்முருகன், ராஜேந்திரன், இளையபெருமாள் ஆகியோர் சேர்ந்து ராமச்சந்திரனை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் காசிராஜன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.