/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வைக்கோல் விற்பனை அதிகரிப்பு நெல்லிக்குப்பம் விவசாயிகள் மகிழ்ச்சி வைக்கோல் விற்பனை அதிகரிப்பு நெல்லிக்குப்பம் விவசாயிகள் மகிழ்ச்சி
வைக்கோல் விற்பனை அதிகரிப்பு நெல்லிக்குப்பம் விவசாயிகள் மகிழ்ச்சி
வைக்கோல் விற்பனை அதிகரிப்பு நெல்லிக்குப்பம் விவசாயிகள் மகிழ்ச்சி
வைக்கோல் விற்பனை அதிகரிப்பு நெல்லிக்குப்பம் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 20, 2025 12:31 AM

நெல்லிக்குப்பம்.: நெல்லிக்குப்பம் பகுதியில் வைக்கோல் விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் நன்றாக இருப்பதால் ஆண்டுமுழுவதும் விவசாயம் செய்கின்றனர்.இங்கு பிரதானமாக நெல்,கரும்பு,வாழை பயிர் செய்கின்றனர்.தற்போது பல நுாறு ஏக்கர் பரப்பில் பயிர் செய்த நெல் அறுவடை நடக்கிறது. தற்போது சேலம்,கள்ளக்குறிச்சி,தருமபுரி,தென்காசி போன்ற பகுதிகளில் போதுமான மழை இல்லாததால் அங்கு நெல் விவசாயம் குறைந்தது. இதனால் அப்பகுதி கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி வியாபாரிகள் நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வைக்கோல் வாங்கி லாரிகளில் ஏற்றிச்செல்கின்றனர். ஒரு கட்டு 80 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வியாபாரிகளே வைக்கோலை கட்டுகளாக கட்டி கொள்வதால் விவசாயிகள் வேலையும் எளிதாகியுள்ளது.