/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பேச்சுவார்த்தை சுமூகம்: சாலை மறியல் ஒத்திவைப்பு பேச்சுவார்த்தை சுமூகம்: சாலை மறியல் ஒத்திவைப்பு
பேச்சுவார்த்தை சுமூகம்: சாலை மறியல் ஒத்திவைப்பு
பேச்சுவார்த்தை சுமூகம்: சாலை மறியல் ஒத்திவைப்பு
பேச்சுவார்த்தை சுமூகம்: சாலை மறியல் ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 14, 2025 11:30 PM

புவனகிரி: புவனகிரி பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றிக் கோரி நாளை நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
புவனகிரி பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி நாளை 16ம் தேதி பேரூராட்சி அலுவலகம் எதிரில் மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என, ம.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி அறிவித்தார்.
இது தொடர்பாக புவனகிரி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. தாசில்தார் சித்ரா தலைமை தாங்கினார்.வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி, சப் இன்ஸ்பெக்டர் லெனின் முன்னிலை, ம.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், ஒன்றிய செயலாளர் ரமேஷ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேச்வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நாளை நடக்க இருந்த மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும், ம.தி.மு.க., வினர் கூறினர்.