/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் என்.சி.சி., மாணவிக்கு பாராட்டு துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் என்.சி.சி., மாணவிக்கு பாராட்டு
துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் என்.சி.சி., மாணவிக்கு பாராட்டு
துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் என்.சி.சி., மாணவிக்கு பாராட்டு
துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் என்.சி.சி., மாணவிக்கு பாராட்டு
ADDED : செப் 18, 2025 03:12 AM

சிதம்பரம்: டில்லியில் நடந்த தேசிய மாணவர் படை துப்பாக்கி சூடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள குமராட்சியில் அமைந்துள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில். தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன் தலைமையில், தேசிய மாணவர் படை துவக்கப் பட்டு மூன்று ஆண்டுகளாக செயல்பட்ட வருகிறது. கல்லுாரியில் ஆங்கிலம், மூன்றாம் ஆண்டு பயிலும், தேசிய மாணவர் படை மாணவி கீர்த்தனா, டில்லியில் நடைபெறும் (டி.எஸ்.சி.,) எனப்படும் தால்சானிக் கேம்ப் செல்வதற்கு, தேர்வு செய்யப்பட்டார். இந்திய அளவில், அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.
அதில், மாணவி கீர்த்தனா பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.
அதனை தொடர்ந்து, வெற்றி பெற்று, நேற்று கல்லுாரிக்கு வருகை தந்த மாணவி கீர்த்தனாவிற்கு, கல்லுாரி தேசிய மாணவர் படை மற்றும் கல்லுாரி சார்பாக சிறப்பான வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு, முதல்வர் மீனா தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன் வரவேற்றார். துறை தலைவர்கள் சிற்றரசு, பூபாலன், செந்தில்குமார், தேவநாதன், நுாலகர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.