ADDED : பிப் 25, 2024 04:43 AM
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டமைப்பியல் துறையில் 'ஸ்ட்ரெஸ் 2024'என்ற தலைப்பில் மாணவர்களுக்கான தேசிய கருத்தரங்கம் நடந்தது.
துவக்க விழாவிற்கு பொறியியல் புல முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கட்டமைப்பியல் துறைத் தலைவர் விடிவெள்ளி வரவேற்றார்.
பல்கலகழக பதிவாளர் சிங்காரவேல் கருத்தரங்கை துவக்கி வைத்தார். சென்னை அருள்நம்பி கன்சல்டன்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் அருள் நம்பி சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை பேராசிரியர் சீனிவாசன் செய்திருந்தார்.
கருத்தரங்கில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ மாணவியர் சார்பில், 45 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாணவர் மன்ற தலைவர் அனிஷ்குமார், துணைத் தலைவர்
சிவராம்குமார், பொதுச் செயலாளர் பிரியங்கா மீனாட்சி, கருத்தரங்கு செயலாளர் ராகுல், வேலையமர்வு செயலாளர் பெருமாள் ராஜ், விளையாட்டு செயலாளர் முகமது பாசில் ஒருங்கிணைத்தனர்.
பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார்.