நாதஸ்வர வித்வான் கழுத்தறுத்து கொலை
நாதஸ்வர வித்வான் கழுத்தறுத்து கொலை
நாதஸ்வர வித்வான் கழுத்தறுத்து கொலை
ADDED : ஜூலை 01, 2025 12:20 AM

நெல்லிக்குப்பம்::
நாதஸ்வர வித்வானை கழுத்து அறுத்து கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு, புதுநகரை சேர்ந்தவர் நாதஸ்வர வித்வான் நாகமுத்து, 52. இவர், நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த பட்டம்மாள் என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, சுடுகாட்டு பகுதியில் இருப்பதாக கூறினார்.
இரவு வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர். சுடுகாடு அருகில் உள்ள வாய்க்காலில் நாகமுத்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
நாகமுத்து அணிந்திருந்த 3 சவரன் செயின், மோதிரம் மாயமானது தெரிந்தது. சம்பவ இடத்தில் மிளகாய் பொடி துாவப்பட்டிருந்தது.
நாகமுத்து உடல் அருகில் கிடந்த அவரது மொபைல் போன் மீட்கப்பட்டு, நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
நகைக்காக கொலை நடந்ததா அல்லது முன்பகை காரணமா என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.