/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நாமக்கல் கொலை வழக்கு: கடலூரில் தொழிலாளி சரண்நாமக்கல் கொலை வழக்கு: கடலூரில் தொழிலாளி சரண்
நாமக்கல் கொலை வழக்கு: கடலூரில் தொழிலாளி சரண்
நாமக்கல் கொலை வழக்கு: கடலூரில் தொழிலாளி சரண்
நாமக்கல் கொலை வழக்கு: கடலூரில் தொழிலாளி சரண்
ADDED : ஜன 13, 2024 07:38 AM

கடலுார் : நாமக்கல்லில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவர், ரெட்டிச்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலை ஸ்டேஷன் எதிரில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஒருவர், கொலை வழக்கில் சரணடைய வந்துள்ளதாக கூறினார்.
அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி ரவி,57; என்பதும், இவர், கடந்த 5ம் தேதி அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம்,60; கொலை வழக்கில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்து சரணடைய வந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து ரெட்டிச்சாவடி போலீசார், ரவி சரணடைந்தது குறித்து பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளிப்பாளையம் போலீசார் வந்ததும், அவர்களிடம் ரவியை ஒப்படைக்க உள்ளனர்.