ADDED : பிப் 24, 2024 06:27 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே காணாமல் போனவரின் உடலை துாக்குபோட்டுக்கொண்ட நிலையில் மீட்டனர்.
பண்ருட்டி அடுத்த காட்டுகூடலுார் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் மணி, 55; இவர் கடந்த 19ம் தேதியன்று வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.
வீட்டில் உள்ளவர்கள் இவரை தேடிவந்தனர். இந்நிலையில் வீரசிங்கன்குப்பம் முந்திரிகாட்டில் உள்ள மரத்தில் கயிற்றால் துாக்கில் தொங்கிய நிலையில் மணியின் உடலை மீட்டனர்.
புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.