ADDED : பிப் 12, 2024 06:25 AM

பரங்கிப்பேட்டை : முனியனார் கோவிலில் நடந்த லட்ச தீப விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, கோவில் வளாக பகுதிகளில், விளக்கேற்றி வழி பட்டனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தில் உள்ள முனியனார் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று லட்ச தீப விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு, 78 வது லட்ச தீப விழாவை முன்னிட்டு முனியனார், ஐயனார், நல்ல நாயகி, பொன்னி அம்மன், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, மாலை 5;30 மணிக்கு அலங்கார காவடி வீதியுலா வந்து லட்ச தீப விழா நடந்தது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, கோவில் வளாக பகுதிகளில் விளக்கேற்றி வழிப்பட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.