Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போக்குவரத்து நெரிசலால் அவதி வாகன ஓட்டிகளுக்குள் அடிதடி

போக்குவரத்து நெரிசலால் அவதி வாகன ஓட்டிகளுக்குள் அடிதடி

போக்குவரத்து நெரிசலால் அவதி வாகன ஓட்டிகளுக்குள் அடிதடி

போக்குவரத்து நெரிசலால் அவதி வாகன ஓட்டிகளுக்குள் அடிதடி

ADDED : மார் 28, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம் : விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் வாகன நெரிசல் காரணமாக, வாகன ஓட்டிகள் சாலையில் கட்டிப்புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருத்தாசலம் நகரில் ஜங்ஷன் சாலை, கடலுார், பெண்ணாடம் மற்றும் வேப்பூர் சாலைகள் பிரதான பகுதிகளாக உள்ளன. பெருவணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன.

இவற்றுக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், சாலையோரம் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று மதியம் 1:00 மணியளவில், ஜங்ஷன் சாலையில் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய தனியார் பள்ளி வேன், நீண்டநேரம் ஹாரன் ஒலித்தபடி வந்தது.

இதனை குழந்தையுடன் பைக்கில் சென்ற வாகன ஓட்டி ஒருவர், தட்டிக் கேட்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டு, சாலையில் கட்டிப்புரண்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவிவயது. பொதுமக்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை. இதனால், 20 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us