/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தம்பதி மீது தாக்குதல் தாய், மகனுக்கு வலைதம்பதி மீது தாக்குதல் தாய், மகனுக்கு வலை
தம்பதி மீது தாக்குதல் தாய், மகனுக்கு வலை
தம்பதி மீது தாக்குதல் தாய், மகனுக்கு வலை
தம்பதி மீது தாக்குதல் தாய், மகனுக்கு வலை
ADDED : ஜன 04, 2024 03:51 AM
புவனகிரி: புவனகிரி அருகே முன்விரோதத்தில் தம்பதியை தாக்கிய தாய், மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
புவனகிரி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி. விவசாயி; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் குடும்பத்திற்கும் இடையே, இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வயலுக்கு சென்ற கருணாநிதியை, இளங்கோவன் மனைவி ஜெயலட்சுமி, மகன் சுரேந்திரன் இருவரும் வழி மறித்து தாக்கினார்.
தடுக்க வந்த கருணாநிதியின் மனைவி மங்கையர்கரசியையும் தாக்கினர். காயமடைந்த இருவரும், சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து தாய், மகனை தேடி வருகின்றனர்.