Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

ADDED : அக் 17, 2025 11:36 PM


Google News
சிறுபாக்கம்: பருவ மழை துவங்கியதால் மங்களூர் ஒன்றியத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

மங்களூர் ஒன்றியத்தில் சிறுபாக்கம், அடரி, ராமநத்தம், ஆவட்டி உட்பட 66 ஊராட்சிகள் உள்ளன.

இப்பகுதியில் ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவது, வெள்ளாற்றையொட்டிய கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில், நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி மங்களூர் ஒன்றிய கிராமங்களில் மழை பெய்து வருகிறது.

இதனால், தாழ்வான பகுதிகளிலுள்ள கிராமங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க, மங்களூர் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டுள்ளன.

அதனை, மங்களூர் ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, முருகன், நிர்வாக மேலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us