Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு பணிகள்... தீவிரம்; வெள்ள பாதிப்பை தடுக்க மணல் மூட்டைகள் தயார்

மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு பணிகள்... தீவிரம்; வெள்ள பாதிப்பை தடுக்க மணல் மூட்டைகள் தயார்

மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு பணிகள்... தீவிரம்; வெள்ள பாதிப்பை தடுக்க மணல் மூட்டைகள் தயார்

மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு பணிகள்... தீவிரம்; வெள்ள பாதிப்பை தடுக்க மணல் மூட்டைகள் தயார்

ADDED : செப் 23, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
கடலுார்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து துறை அலுவலர்களையும் முடுக்கிவிட்டு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. கடலுார் மாவட்டமானது மேற்கே உள்ள 15 மாவட்டங்களின் வடிகால் மாவட்டமாக உள்ளது. மேற்கு பகுதியில் பெய்யும் மழை, வெள்ளம் யாவும் கடலுார் மாவட்டம் வழியாகத்தான் வங்கக்கடலில் கலக்க வேண்டும்.

அதனால், எப்போதும் மழைக்காலங்களில் பல்வேறு பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு முன்பு 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதல், 2011ம் ஆண்டு 'தானே' புயல் போன்ற சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கடலுார் உள்ளது.

தமிழகத்தில் அக்., -நவ.,- டிச., ஆகிய 3 மாதங்கள் வடகிழக்கு பருவ காற்றின் மூலம் மழை பெறும் மாதங்களாகும். இக்காலத்தில்தான் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். கடந்த பருவமழை காலங்களில் பெருவெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

வடகிழக்கு பருவ மழை துவங்க இன்னும் ஓரிரு வாரம் உள்ளது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை ஏற்பட்ட முன் அனுபவம் மற்றும் இடர்பாடுகளின் நினைவில் கொண்டு தற்போது மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, நீர் நிலைகள், குட்டைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. கடலுார் மாநகரில் கழிவுநீர் வாய்க்கால் துார்வாரும் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

அனைத்து பேரிடர் பாதுகாப்பு மையங்கள், பள்ளிகளில் மக்களை தங்க வைக்க அனைத்து அடிப்படை வசதிகள் தயார் நிலையி ல் உள்ளன.

அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் தேவையான மணல் மூட்டை, மரங்கள், பவர் பம்புகள், விளக்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் பிடிப்பதற்கும், பாம்பு பிடிப்பவர்களின் விவரங்களும் தயார் நிலையில் உள்ளது. மீட்பு படைகளுடன் கலெக்டர் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சி கடலுார் மாவட்டத்தில் பல இடங்களில் நடந்தது.

லாரிகள், டிரக், ஜே.சி.பி, டிராக்டர்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுப்பணித்துறை சார்பில் பாசன வாய்க்கால்களின் கரைகளை ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள பகுதிகள் சரி செய்யும் பணி நடந்து வருகிறது.

அனைத்து சுகாதார நிலையங்களில் நடமாடும் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், பாம்பு கடிக்கு தேவையான மருந்துகள் மற்றும் போதிய அளவில் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மின்கம்பங்கள் மற்றும் மின்சார உபகரணங்களை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகள் ஆய்வு செய்து சீரமைக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பின்போது பணியாற்ற நீச்சல் தெரிந்த வீரர்களின் பட்டியல், 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us