ADDED : ஜன 04, 2024 03:56 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.
சிதம்பரம் அடுத்த பாலுாத்தங்கரை கிராமத்தில், ராமச்சந்திரன என்பவரது வீட்டில் சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில், சிலிண்டர் வெடித்து, பொருட்கள் சேதமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, பாண்டியன் எம்.எல்.ஏ., சந்தித்து, ஆறுதல் கூறியுடன், நிவாரண உதவி வழங்கினார்.
கட்சி நிர்வாகிகள் ரெங்கம்மாள், வசந்த், வாசுதேவன், லதா ராஜேந்திரன், தமிழரசன், சேதுமாதவன், மாரியப்பன், சுப்பிரமணியன், காதர் உசேன், ஜானகிராமன் உடனிருந்தனர்.