/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குடியிருப்பு திறப்பு விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு குடியிருப்பு திறப்பு விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
குடியிருப்பு திறப்பு விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
குடியிருப்பு திறப்பு விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
குடியிருப்பு திறப்பு விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மே 22, 2025 11:28 PM

பண்ருட்டி: கீழக்குப்பம் ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆணை வழங்கினார்.
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 336 குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையொட்டி கீழக்குப்பம் ஊராட்சியில் நடந்த விழாவில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார்.
தாசில்தார் பிரகாஷ், துணை தாசில்தார் வெற்றிவேல், பி.டி.ஓ.,க்கள் புனிதா, பாபு, செயற் பொறியாளர் பாலமுரளிதரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.