/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கல்வி தரத்தில் கடலுார் மாவட்டம் முதலிடம் பெறும் அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை கல்வி தரத்தில் கடலுார் மாவட்டம் முதலிடம் பெறும் அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை
கல்வி தரத்தில் கடலுார் மாவட்டம் முதலிடம் பெறும் அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை
கல்வி தரத்தில் கடலுார் மாவட்டம் முதலிடம் பெறும் அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை
கல்வி தரத்தில் கடலுார் மாவட்டம் முதலிடம் பெறும் அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை
ADDED : செப் 21, 2025 05:31 AM

பரங்கிப்பேட்டை : கல்வித்தரத்தில், கடலுார் மாவட்டம் முதலிடம் பெறும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரில் பள்ளி கல்வித்துறை சார்பில், 9 அரசு பள்ளிகளுக்கு 14 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் 2 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில், துாக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அமைச்சர் பன்னீர்செல்வம், புதிய கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின், அவர் பேசுகையில், 'கல்வித்தரம் உயர்த்துவதற்காக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
கல்வியில் கடலுார் மாவட்டம் முதலிடம் பெறும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள கொடிப்பள்ளம், திருமுட்டம், ஸ்ரீநெடுஞ்சேரி, காட்டுமன்னார்கோவில், சி.முட்லுார், எடையார், மழவராயநல்லுார், குமராட்சி மற்றும் மேல்புவனகிரி ஆகிய பகுதிகளில் 14 கோடியே 33 லட்சம் ரூபாயின் புதியதாக 47 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், 3 மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்கள், 1 ஆண்கள் கழிவறை, 2 பெண்கள் கழிவறை மற்றும் 400 மீட்டர் சுற்றுச்சுவர் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் கல்வியில் தமிழகம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது' என்றார்.
விழாவில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவசங்கர நாயகி, மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கலையரசன், டாக்டர் மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.