/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொது அறிவு புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்' பொது அறிவு புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
பொது அறிவு புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
பொது அறிவு புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
பொது அறிவு புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
ADDED : மார் 22, 2025 09:36 PM

கடலுார் : பாட புத்தகம் மட்டுமின்றி, பொது அறிவை வளர்க்கும் புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.
கடலுாரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, 3வது புத்தக திருவிழா கண்காட்சி, மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று (22ம் தேதி) முதல் 31ம் தேதி வரை 10 நாட்கள் ஏற்பாடு செய்யப்பாடு செய்துள்ளது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
புத்தக திருவிழா கண்காட்சி திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஒ., ராஜசேகரன் வரவேற்றேர். கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏ., க்கள் ஐயப்பன், சபா ராஜேந்திரன், மேயர் சுந்தரி ராஜா, கமிஷனர் அனு, கூடுதல் கலெக்டர் சரண்யா முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று திறந்து வைத்தனர். பதிப்பாளர் சங்கம் சொக்கலிங்கம் வாழ்த்தி பேசினார்.
அமைச்சர் பன்னீர்செல்வம், போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:
மாணவ, மாணவிகள் படிப்பறிவு மட்டுமல்ல பொது அறிவையும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், புத்தக திருவிழா நடத்த முதல்வர் உத்தர விட்டார். அதன்படி மாவட்டம்தோறும் புத்தக கண்காாட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டத்தில் 3வது ஆண்டாக புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைவரும் புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற நோக்கில் 2010ம் ஆண்டு கோபாலபுரத்தில், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நுாலகத்தை ரூ.172 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. இங்கு, ஐந்தரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
நான் படிக்கும் காலத்தில், நாவல்கள், கதை புத்தகங்களை விரும்பி படிப்பேன். அறிவை வளர்க்கும் பிற நுால்களையும் படித்திருந்தால் நானும் ஐ.ஏ.எஸ்., ஆகி இருப்பேன்.
புத்தக திருவிழாவில் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 3 டி. ஸ்பைடர் மேன், கோளரங்கம் போன்றவற்றில் பணம் வசூலிக்க கூடாது என்று கூறியுள்ளேன். மாணவர்கள் பாட புத்தகத்தை படிப்பதோடு, பொது அறிவை வளர்க்கும் புத்தகங்களையும் படிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில் எஸ்.பி., ஜெயக்குமார், துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.