ADDED : ஜூலை 03, 2025 11:17 PM
புதுச்சத்திரம்: வாண்டையாம்பள்ளம் அங்காளம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.
அதனையொட்டி, கடந்த 29 ம் தேதி காலை 7.00 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றம், மாலை 4.00 மணிக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது. 30 ம் தேதி மாலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, 8.00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது.
கடந்த 1ம் தேதி அன்னப்பன்பேட்டை கடற்கரையில் இருந்து, பால்குடம் எடுத்து அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேற்று இடும்பன் பூஜை நடந்தது.