
அறக்கட்டளை துவக்கம்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக தமிழியல் துறையில், 5 லட்சம் நிதியத்தில் பேராசிரியர் திண்ணப்பன் - இந்திராள் அறக்கட்டளை துவக்க விழா நடந்தது. துணை வேந்தர் கதிரேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தமிழியியல் துறைத் தலைவர் பிலவேந்திரன் வரவேற்றார். இந்திய மொழிப்புல முதல்வர் பாரி அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் மருதுார் அரங்கராசன் பேசினார். நிகழ்ச்சியில், புல முதல்வர்கள் பாலாஜி சுவாமிநாதன், விஜயராணி, அருள்செல்வி, ராமசாமி கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு பாராட்டு
சிதம்பரம்: அண்ணாமலை நகரில் உள்ள 4வது தமிழ்நாடு கூட்டுத் தொழில்நுட்ப கம்பெனி என்.சி.சி. சார்பில் 6 மாணவர்கள் கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா குலா மாவு எனும் இடத்தில் அகில இந்திய அளவில் நடைபெற்ற மலையேறும் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் 2 பேர், காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே.,பொறியியல் கல்லுாரி மாணவர்கள் 2 பேர், விழுப்புரம் காந்தி மெமோரியல் மேல்நிலைப்பள்ளி மாணவர், அண்ணாமலை நகர் ராணி சீதையாச்சி பள்ளி மாணவர் என 6 பேர் பங்கேற்று திரும்பினர். இவர்களை அந்தந்த கல்லுாரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
விருத்தாசலம்: மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தமிழ்வேல் வரவேற்றார். கொளஞ்சியப்பர் கலைக்கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் ெஹலன் ரூத் ஜாய்ஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பெண்கள் குறைதீர் குழு ஒருங்கிணைப்பாளர் எழில், பெண்களுக்கு கல்லுாரியில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து விளக்கினார். நுகர்வோர் மன்ற தலைவர் இளங்கோவன், கல்லுாரி நுாலகர் பிரதீப், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் உயர்கல்வி வேலைவாய்ப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
களப்பயண முகாம்
பண்ருட்டி: பனிக்கன்குப்பம் அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கான கல்லுாரி களப்பயண முகாம் நடந்தது. கல்லுாரி புல முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். வட்டார ஆசிரியர் பயிற்றுநர் மைய கண்காணிப்பாளர்கள் பண்ருட்டி இளஞ்செழியன், அண்ணா கிராமம் செழியன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 289 பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கான மேற்படிப்பு, வேலை வாய்ப்பு குறித்து பேராசிரியர்கள் சுரேஷ்குமார், சீனுவாசன், மங்கையர்கரசி, கவிதா, முருகானந்தன் எடுத்துரைத்தனர். என்.எஸ்.எஸ்.ஒருங்கிணைப்பாளர் மாலா, ஆரோக்கியசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மக்களுடன் முதல்வர் முகாம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 18, 19, 20, 21, 22, 23வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்களிடம் துறை ரீதியான மனுக்களை பெறும் முகாமிற்கு, நகர மன்ற தலைவர் சங்கவி தலைமை தாங்கினார். துணை் சேர்மன் ராணி, கமிஷனர் பானுமதி முன்னிலை வகித்தனர். தாசில்தார் அந்தோணிராஜ் வரவேற்றார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, முகாமை துவக்கி வைத்தார். நகரமைப்பு அலுவலர் செல்வம், துப்புரவு அலுவலர் பூபதி, துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொலைக்கல்வி: மாணவர் சேர்க்கை
திட்டக்குடி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2024ம் ஆண்டிற்கான அனைத்து இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் டிப்ளமோ பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை, திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பெண்ணாடம் மைய அலுவலகத்திலும் துவங்கியது. திட்டக்குடியில் மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். அலுவலக பணியாளர் லட்சுமி வரவேற்றார். திட்டக்குடி திருக்குறள் பேரவைத் தலைவர் சீனிவாசன் மற்றும் பள்ளி தாளாளர் சிவகிருபா ஆகியோர் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மற்றும் பாட புத்தகங்களை வழங்கி சேர்க்கையை துவக்கி வைத்தனர்.
செயற்குழு கூட்டம்
பண்ருட்டியில் நடந்த புரட்சிபாரதம் கட்சி வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். நகர தலைவர் கவியரசு முன்னிலை வகித்தார். ஒன்றிய நிர்வாகி பெருமாள் வரவேற்றார்.
நெற்பயிரில் நோய் தாக்குதல்
பெண்ணாடம்: திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், இருளம்பட்டு, அரியராவி, கொசப்பள்ளம், துறையூர், இறையூர் உட்பட பல கிராம பகுதிகளில் விவசாயிகள் 500 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் நடவு சாகுபடி செய்தனர்.
வேளாண்புல மாணவர்கள் பயிற்சி
புதுச்சத்திரம்: அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவர்கள் சிலம்பிமங்களத்தில் தங்கி பயிற்பெறும் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் அமுதா ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கல்வி உதவித் தொகை வழங்கல்
புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கனரா வங்கி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 2022 - 2023ம் ஆண்டு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, நடந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிட மாணவிகளுக்கு, பெரியப்பட்டு கனரா வங்கி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு கருத்தரங்கு
நடுவீரப்பட்டு: புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கனகலட்சுமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.
தே.மு.தி.க.,வினர் மனு
விருத்தாசலம்: நகரமன்ற தலைவர் சங்கவி முருதாசிடம், தே.மு.தி.க., நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில், அக்கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். அதில், 'விருத்தாசலம் நகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு சிலை வைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.