/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நிலம், வீடு, மனை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்நிலம், வீடு, மனை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
நிலம், வீடு, மனை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
நிலம், வீடு, மனை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
நிலம், வீடு, மனை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஜன 29, 2024 06:21 AM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி 7 கிராம நிலம், வீடு, மனை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார், நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, வெற்றிவேல், செம்புலிங்கம், சந்தியா, சூர்யபிரியா, சாமிநாதன், பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தற்போது கலெக்டர், நில எடுப்பு அதிகாரிகள், என்.எல்.சி., நிர்வாகம் ஏக்கருக்கு 23 லட்சம், நத்தம் மனைக்கு 2 லட்சத்தி 50 ஆயிரம் மட்டும் வழங்குவதாக அறிவித்துள்ளதை ஏற்க மறுப்பது. மத்திய அரசு குடியமர்வு திட்டத்தில் ஏக்கருக்கு 25 லட்சமும், அனைத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள மனைகளுக்கு 7 லட்சம் ரூபாயும், மாற்று குடியிருப்பு கட்டித் தந்து வேலை வாய்ப்பு, வாழ்வாரத்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.