ADDED : ஜன 07, 2024 05:35 AM

மந்தாரக்குப்பம்; கம்மாபுரம் வட்டார சுகாதாரத் துறை சார்பில் மந்தாரக்குப்பம், சேப்ளாநத்தம், உய்யக்கொண்டராவி உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.
மருத்துவ அலுவலர் கவிதா பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி குடியிருப்பு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் அகற்றுதல், கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தல், தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.