/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குள்ளஞ்சாவடியில் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் குள்ளஞ்சாவடியில் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
குள்ளஞ்சாவடியில் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
குள்ளஞ்சாவடியில் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
குள்ளஞ்சாவடியில் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 20, 2025 12:33 AM

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் கிராம துாய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது
குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த இந்த முகாமில் அம்பலவாணன்பேட்டை, ஆயிக்குப்பம், வழுதலம்பட்டு, அகரம், த.பாளையம், கிருஷ்ணன்குப்பம், ஊராட்சிகளை சேர்ந்த துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு டாக்டர்கள் ரேவதி மணிபாலன், திவ்யா, சுகாதார ஆய்வாளர் சுகன், தொற்றா நோய் பிரிவு செவிலியர் வடிவழகி குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் 40க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனைகள், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.