ADDED : ஜன 10, 2024 11:16 PM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சம்மந்தம் கிராமத்தில், வேளாண் புல, தோட்டக்கலை மாணவர்கள் சார்பில், விவசாயிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலம், தோட்டக்கலை இறுதியாண்டு மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் சம்மந்தம் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அங்கு, மாணவர்கள் சார்பில், விவசாயிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
மாணவர் குழு தலைவர் விக்ரம் தலைமை தாங்கினார். பு.முட்லூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜானகி தலைமையில், மருத்துவ குழுவினர் விவசாயிகளுக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஆரோக்கியமான வாழ்விற்காக அடிப்படை விஷயங்கள் குறித்து மாணவர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில் குழு மாணவர்கள் சத்தியமூர்த்தி, ஸ்ரீதர், ஸ்ரீராம், தமிழ்வாணன், தரணிதரன், வாஞ்சிநாதன், விக்னேஷ், விஜயராஜ், யுவராஜ் ஆகியோர், முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கான உதவிகளை செய்தனர்.