ADDED : ஜன 17, 2024 01:48 AM
குள்ளஞ்சாவடி, : கடலுார் கிழக்கு மாவட்டம் குறிஞ்சிபாடி தொகுதி சுப்பிரமணியபுரத்தில் ம.தி.மு.க., சார்பில் மக்கள் நலனில் அக்கரை நிலைத்திட களப்பணியாளர்கள் கருத்தரங்கம் நடந்தது.
குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருபாசங்கர் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராமன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் சட்டநாதன், மாவட்ட துணை செயலாளர் திராவிட அரசு முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன், கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினர்.
இதில், பெருமாள் ஏரியை ரூ.114 கோடியில் துார்வாரிய தமிழக அரசு, வேளாண் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, குறிஞ்சிப்பாடி பேரூர் சார்பில் தேர்தல் நிதி, 80 ஆயிரம் ரூபாய், மாவட்ட செயலாளரிடம் வழங்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி பேரூர் செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.


