ADDED : பிப் 25, 2024 04:56 AM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாற்றுாரில் நடந்த மாசிமகத்தில், ஏராளமானோர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாறு, மணிமுக்தாறு, ஆகாயகங்கை என முக்கூடல் பகுதியாக உள்ள கூடலையாற்றுாரில் மாசி மகத் திருவிழா நேற்று நடந்தது. சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பொதுமக்கள் ஆற்றுக்கு வந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
நெரிகாட்டுநாதர் கோவிலிலிருந்து ஞானசக்தி, பராசக்தி சமேத நர்த்தனவல்லபேஸ்வரர் முக்கூடல் ஆற்றில் எழுந்தருள செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.