/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியோர் கைது ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியோர் கைது
ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியோர் கைது
ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியோர் கைது
ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியோர் கைது
ADDED : மார் 26, 2025 01:33 AM

விருத்தாசலம்:பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி, நகை, பணம் பறித்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பழைய காலனியை சேர்ந்தவர் சிவக்குமார், 23; திருப்பூர் பனியன் கம்பெனி பணியாளர். இவர், 30 வயது பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அதை தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து மிரட்டி வந்தார்.
தன் நண்பரான புதுகாலனி குப்புசாமி மகன் வினோத்குமார், 23, என்பவருக்கு அந்த வீடியோவை அனுப்பியுள்ளார்.
தனியார் பள்ளி பஸ் டிரைவரான அவர், அந்த பெண்ணிடம் வீடியோவை காட்டி மிரட்டி, பலாத்காரம் செய்ததுடன், 50,000 ரூபாய் பணம் மற்றும் 3 சவரன் நகையை பறித்துள்ளார். நேற்று முன்தினமும் தொடர்ந்து மிரட்டவே, அப்பெண் புகாரில், கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சிவக்குமார், வினோத்குமாரை கைது செய்தனர்.