/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் 31ம் தேதி வரை சேர்க்கை நீட்டிப்பு மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் 31ம் தேதி வரை சேர்க்கை நீட்டிப்பு
மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் 31ம் தேதி வரை சேர்க்கை நீட்டிப்பு
மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் 31ம் தேதி வரை சேர்க்கை நீட்டிப்பு
மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் 31ம் தேதி வரை சேர்க்கை நீட்டிப்பு
ADDED : மே 20, 2025 06:43 AM
கடலுார்: கடலுார் மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் கட்டண சலுகையுடன் நடக்கும் மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, மகாலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடலுார் அடுத்த பூண்டியாங்குப்பம் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் டி.எம்.எல்.டி., டி.எம்.இ., டி.இ.இ.இ., டி.அக்ரி., டி.இ.சி.இ., டி.சி.எஸ்.இ., டி.சிவில்., போன்ற டிப்ளமோ பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேர்க்கை பெறலாம்.
இந்தாண்டு முதல் பிளஸ் 2 வில் அறிமுறை அறிவியல், வணிகவியல், வரலாறு போன்று எந்த பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பாலிடெக்னிக்கில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெறலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே பிளஸ் 2வில் எந்த பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் லேட்டரல் என்ட்ரி மூலம் பாலிடெக்னிக் சேர்க்கை பெறலாம்.
கடலுார் மஞ்சக்குப்பம் மகாலட்சுமி ஓட்டல் மேனேஜ்மெண்ட் அன்டு கேட்டரிங் கல்லுாரியில் மூன்றாண்டு பி.எஸ்.சி., டிப்ளமோ மற்றும் ஓராண்டு கேட்டரிங் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. 10ம் வகுப்பு தோல்வி, 8ம் வகுப்பு தேர்ச்சி ஆனவர்கள் புட் புரொடிக் ஷன் மற்றும் புட் பேவரேஜ் சர்வீஸ் போன்ற பிரிவுகளில் சேர்க்கை பெறலாம்.
கடலுார் மஞ்சக்குப்பம் மகாலட்சுமி ஐ.டி.ஐ.,யில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் ஏ.சி.,மெக்கானிக், எலக்ட்ரீசியன், பிட்டர், எம்.எம்.வி., ஒயர்மேன் மற்றும் வெல்டிங் டெக்னீசியன் போன்ற பிரிவுகளில் சேர்க்கை பெறலாம்.
கடலுார் மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் கட்டண சலுகையுடன் நடக்கும் மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.