ADDED : மே 20, 2025 06:47 AM
விருத்தாசலம்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று பூதாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில், ஆலிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர், 66, என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.