Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பண்ருட்டி அருகே ஓடும் லாரி தீப்பிடித்தது; பல லட்சம் ரூபாய் மளிகை பொருள் சேதம்

பண்ருட்டி அருகே ஓடும் லாரி தீப்பிடித்தது; பல லட்சம் ரூபாய் மளிகை பொருள் சேதம்

பண்ருட்டி அருகே ஓடும் லாரி தீப்பிடித்தது; பல லட்சம் ரூபாய் மளிகை பொருள் சேதம்

பண்ருட்டி அருகே ஓடும் லாரி தீப்பிடித்தது; பல லட்சம் ரூபாய் மளிகை பொருள் சேதம்

ADDED : ஜூன் 06, 2025 08:45 AM


Google News
Latest Tamil News
பண்ருட்டி; பண்ருட்டி அருகே மளிகைப் பொருட்கள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு உளுந்து, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் பல்வேறு பருப்பு மூட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றிக் கொண்டு (டி என்68- ஏஜெ 7880) பதிவெண் கொண்ட லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. லாரியை கும்பகோணம், செட்டிமண்டபத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஓட்டினார்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் மதியம் 1:00 மணிக்கு வந்தபோது, சாக்குமூட்டைகளில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனை பார்த்து அவ்வழியாக சென்றவர்கள், டிரைவரிடம் தெரிவித்தனர். உடன், டிரைவர் ராதாகிருஷ்ணன் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சாக்கு மூட்டைகள் மீது போடப்பட்டிருந்த தார்பாயை அகற்ற முயற்சித்தார்.

அப்போது, தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தப்பியோடினார். தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில், நெல்லிகுப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா உள்ளிட்ட குழுவினர் 2 மணி நேரத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் லட்சக்கணக்கான மளிகை பொருட்கள் எரிந்து சேதமானது.

பண்ருட்டி டி.எஸ்.பி., ராஜா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் காரணமாக வி.கே.டி.,தேசிய நெடுஞ்சாலையில் மாலை 3:00 மணி வரை போக்குவரத்தது பாதித்தது.

காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us