/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் பொருட்கள் திருட்டு பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் பொருட்கள் திருட்டு
பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் பொருட்கள் திருட்டு
பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் பொருட்கள் திருட்டு
பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் பொருட்கள் திருட்டு
ADDED : மார் 19, 2025 04:21 AM
நெல்லிக்குப்பம் : பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 50; வியாபாரி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு பண்ருட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.5,000 பணம் மற்றும் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் திருடு போயிருந்தது.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.