ADDED : ஜூலை 03, 2025 11:15 PM

கடலுார்: கடலுார் பழைய வண்டிப்பாளையம் எஸ்.கே.,வித்யாமந்திர் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.
பள்ளி தாளாளர் கவிதா கண்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மோகன் வரவேற்றார். விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களுக்கு துறை சார்ந்த போட்டிகள் நடந்தது. அண்ணாமலை பல்கலைகழகத்தின் பேராசிரியர் கார்த்திக் குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு பேசினார். விழாவில், ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.