/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விஸ்வநாதபுரம் சாலையில் விளக்குகள் அமைப்புவிஸ்வநாதபுரம் சாலையில் விளக்குகள் அமைப்பு
விஸ்வநாதபுரம் சாலையில் விளக்குகள் அமைப்பு
விஸ்வநாதபுரம் சாலையில் விளக்குகள் அமைப்பு
விஸ்வநாதபுரம் சாலையில் விளக்குகள் அமைப்பு
ADDED : ஜன 04, 2024 04:06 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரம் சாலையில், தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் நகர பகுதியான திருக்கண்டேஸ்வரத்துக்கு 2 கி.மீட்டர் தூரம் வர வேண்டும். இந்நிலையில், விஸ்வநாதபுரம் சாலையில் தெரு விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில், விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால், பொதுமக்கள், டியூஷன் முடிந்து செல்லும் பள்ளி மாணவ மாணவியர் அச்சத்துடன் சென்று வந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது. அதையடுத்து, நேற்று அந்த சாலையில் இருந்த பழைய விளக்குகளுக்கு பதிலாக புதியதாக 50 எல்.இ.டி.விளக்குகள் நகராட்சி சார்பில் பொருத்தப்பட்டது.