/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புதிய உச்சங்களை எட்டுவோம்: என்.எல்.சி., சேர்மன் பேச்சுபுதிய உச்சங்களை எட்டுவோம்: என்.எல்.சி., சேர்மன் பேச்சு
புதிய உச்சங்களை எட்டுவோம்: என்.எல்.சி., சேர்மன் பேச்சு
புதிய உச்சங்களை எட்டுவோம்: என்.எல்.சி., சேர்மன் பேச்சு
புதிய உச்சங்களை எட்டுவோம்: என்.எல்.சி., சேர்மன் பேச்சு
UPDATED : ஜன 04, 2024 06:43 AM
ADDED : ஜன 04, 2024 04:12 AM

நெய்வேலி: என்.எல்.சி., புதிய உச்சங்களை எட்டுவதற்கான கால கட்டத்தில் இருப்பதாக சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசினார்.
என்.எல்.சி.,யில் புதுமையான படைப்புகள் மூலம் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, 'கருத்துருவாக்க திருவிழா' எனும் புதிய திட்டத்தை சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி துவக்கி வைத்தார். என்.எல்.சி., திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் மோகன் ரெட்டி, சுரங்கத்துறை இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன், மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மின் துறை இயக்குனர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.
என்.எல்.சி., நிறுவனத்தின், செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் உற்பத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், 'என் கருத்துருவாக்கம்' என்ற இணையதள பக்கத்தை உருவாக்கியுள்ளது. என்.எல்.சி., ஊழியர்கள் தங்களது புதுமையான கருத்துகளை உருவாக்கி, எளிதான முறையில் சமர்ப்பிப்பதற்கும், பதிவேற்றப்பட்ட யோசனைகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், என்.எல்.சி., புதிய உச்சங்களை எட்டுவதற்கான பாதையில், புதிய எல்லைகளைக் கடந்து செல்லும் முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. விரைவில் புதிய உச்சங்களை எட்டுவோம் என்றார்.