ADDED : மார் 15, 2025 09:07 PM

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஈ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.மருத்துவ அலுவலர் ஆனந்தி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் அறவாழி, சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், மதனகோபால் ஆகியோர் கொண்ட குழுவினர், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், வீடு வீடாக சென்று சிவந்த, உணர்ச்சியற்ற தேமல், காதுகள் தடித்திருத்தல், கை, கால் உணர்ச்சியின்மை குறித்து கிராம மக்களுக்கு தொழுநோய் பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து, கிராம மக்களுக்கு தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.