ADDED : மே 13, 2025 07:12 AM

கடலுார் : வி.சி., கட்சி சார்பில் திருச்சியில் வரும் 31ம் தேதி நடக்கும் மத சார்பின்மை பேரணி குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேத்தியாதோப்பில் நடந்தது.
கடலுார் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி, மதசார்பின்மை பேரணி குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி, துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஜவகர், இளவழகன், தமிழ்மணி, ராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.